அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஏப்.15 முதல் காவல் துறையில் குற்றப் பதிவேடுகளை பாதுகாக்க புதிய முறை அமல்

குற்றப் பதிவேடுகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் வலை பின்னல் அமைப்பு )என்ற புதிய முறை காவல் துறையில் அமல்படுத்தப்படவுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2016, 12:03 pm

தர்மராஜ்

கோவை: குற்றப் பதிவேடுகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் வலை பின்னல் அமைப்பு )என்ற புதிய முறை காவல் துறையில் அமல்படுத்தப்படவுள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 7 மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தமிழகத்தின் 32 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்படவுள்ளது.

இதில், காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு மனு தாரக்களுக்கு எண் வழங்கப்படும்.

அந்த எண்ணைக் கொண்டு தங்களது புகார்களின் நிலை குறித்து எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதனிடையே, தற்போது வரை காவல் துறையில் கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் தாள்களில் எழுது வைப்பதால் நாளடைவில் அழிந்து விடும் நிலை ஏற்படுகிறது. அதே போல், காவல் நிலையங்களிலும் கோப்புகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாப்பதிலும் சிரமம் நிலைவி வந்தது.

எனவே, இந்த புதிய முறை அமல் படுத்தப்பட்டால் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து புகார்களின் விவரங்களை கணினி மூலம் எளிதாக கண்டறியலாம். அதே போல், குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து வைப்பதால் தேவைப்படும் போது எளிதில் எடுத்துக்கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.