வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் கருகிய பயிர்களுடன் முற்றுகை
நீரின்றி கருகிய பயிர்களுடன் விவசாயிகள் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.


நீரின்றி கருகிய பயிர்களுடன் விவசாயிகள் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலர் எம்.எஸ். மாடசாமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய உளுந்து, நெல் பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
பின்னர் ஆட்சியரை சந்தித்து அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் வட்டத்தில் ஊத்துமலை, வடக்குகாவலாக்குறிச்சி, கீழக்கலங்கல், மேலக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், அண்ணாமலைபுதூர், மானூர் ஒன்றியத்தில் கீழப்பிள்ளையார்குளம் உள்பட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளது.
இப்பகுதியில் விவசாயிகள் உளுந்து, நெல் போன்றவை சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் சாகுபடி செய்திருந்த விளைப் பொருட்கள் நீரின்றி கருகி சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நி்வாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணித் தலைவர் ஆர். முத்துராஜ், செயலர் ஏ. வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
ஆட்சியரிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதியில் இருபோகம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை பொய்த்தால் பிசான பருவம் சாகுபடி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும் மழையை எதிர்நோக்கி நடவு செய்ய அமைக்கப்பட்ட நெல் நாற்றங்கால் நீரின்றி கருகியதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே திருநெல்வேலியை வறட்சி மாவட்ட அறிவித்து ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...