தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி வயல்வெளியில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்

Updated on
1 min read

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரணம் வழங்கக் கோரி திருச்சி அருகே வயல்வெளியில் கருப்புக் கொடிகளுடன் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் ஏக்கருக்கு ரூ.30,0000,வாழைக்கு ரூ.1 லட்சம், கரும்பு, வெற்றிலைக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயக்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வயலூர் ஊராட்சி கொத்தட்டை முல்லைநகர் பகுதியில் வயல்வெளியில் இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கொத்தட்டை ராஜேந்திரன்,தியாகராஜன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அயிலை. சிவசூரியன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புக் கொடியுடன் பங்கேற்று கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com