எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

News image
Updated On :28 டிசம்பர் 2016, 1:26 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்த காரணத்தால் பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. தற்போதைய அணைகளின் நீர்இருப்பை கொண்டு அடுத்த 40 தினங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே 2 நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை, சேர்வலாறு அணைப் பகுதியில் தலா 1 மி.மீ, சேர்வலாறு அணையில் 2 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 1.2 மி.மீ, தென்காசியில் 1.6 மி.மீ, ஆலங்குளத்தில் 2.6 மி.மீ, சிவகிரியில் 1 மி.மீ மழையும் பதிவாகியிருந்தன.

நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 22.45 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 60.24 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 36.45 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 39.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.29 அடி, 

குண்டாறு அணையின் நீர்மட்டம் 22.62 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 71.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.74 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 8 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 103 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 17 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 204.75 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை: இந்நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சுத்தமல்லி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்பட இம்மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.