இருமல் மருந்து என நினைத்து மூட்டுவலி மருந்தைக் குடித்தவர் புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருச்சி தில்லைநகர் அருகேயுள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (39). பெயிண்டர். இவருக்கு பல மாதங்களாக இருமல் நோய் இருந்து வந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த சில நாட்களாக இருமல் அதிகமாக இருந்ததால் மருத்துவரிடம் சென்று காண்பித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு இருமல் அதிகமாக இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்த மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். குடித்த சில நிமிடங்களிலேயே நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகள் எரிச்சலாக இருந்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தாரிடம் தெரிவித்த அவர் விளக்கை போட்டு மருந்துபுட்டியை பார்த்துள்ளார். அப்போதுதான் இருமல் மருந்து என நினைத்து மூட்டுவலி மருந்தை (வெளிப்புறம் பூசும் தைலம்) குடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை மணிமாறன் உயிரிழந்தார். இது குறித்து உறையூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

