ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாநில கராத்தே போட்டிக்கு தயாராகும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவிகள்

.மாநில அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் தயாராகி வருகிறார்கள்.

News image
Updated On :10 பிப்ரவரி 2016, 9:48 am

கோ.ஜெயக்குமார்

.மாநில அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் தயாராகி வருகிறார்கள்.இண்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாடமி ஆப் இந்தியா சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிப்ரவரி 21-ம் தேதி மாநில அளவில் பள்ளிகளுக்கிடையிலான 14-வது  கராத்தே போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் மாநில முழுவதும் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கில வழிப் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொள்கிறார்கள்.ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் கடந்த ஆண்டு நடைபெற்ற 13-வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு 18 தங்கம் உள்ளிட்ட 36 பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். தற்போது நடைபெறவுள்ள கராத்தே போட்டியில் கலந்து கொள்ள 6 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியில் சிறப்பு பயிற்சி பள்ளியில் அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சியை சோட்டோக்கான் மாநில தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் அளித்து வருகிறார்.பயிற்சியை புதன்கிழமை பார்வையிட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் கூறுகையில்: தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளியில் உள்ளது.

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினால், கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்று போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது பாராட்டுக்குரியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.