ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தேசிய கணினிப் பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்.புதுதில்லியில் உள்ள தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

News image
Updated On :15 பிப்ரவரி 2016, 6:19 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.புதுதில்லியில் உள்ள தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையில், தேசிய கணினி பாதுகாப்பு தர மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் உயர்மட்டக் குழு புதுதில்லியில் கூடி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் குறித்த கலந்தாய்வை நடத்தியது. இதில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் ச.சரவணசங்கர் (படம்) மற்றும் பதிவாளர் வெ.வாசுதேவன் (படம்) ஆகியோரை மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமித்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

உறுப்பினர்கள், இந்தியாவில் கணினி பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தி பாதுகாக்கவும், வலைதளங்களை எல்லாத் துறையிலும் பயன்படுத்தவும், நாட்டில் கணினியின் பயன்பாட்டு குற்றங்கள் ஏற்படாது தடுக்கவும் ஆலோசனைகள் வழங்குவார்கள்.

தேசிய கணினி பாதுகாப்பு தர மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்ப்டடுள்ள துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோரை திங்கள்கிழமை பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன், இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.