ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: சி.மகேந்திரன்

தமிழ்நாட்டில் பிளவை உருவாக்கி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2016, 3:49 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் பிளவை உருவாக்கி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.

வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் கைது விவகாரம் உள்ளிட்டவற்றில் பாரதீய ஜனதா கட்சி நேருக்கு நேர் சந்திக்க இயலாமல் கொல்லைப் புறமாக வந்து மோசமான அரசியல் செய்து வருகிறது. பா.ஜ.க.யின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தொடர்ந்து தமிழ்நாட்டில் மோசமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்.

இவரது நடவடிக்கைகள் எரிச்சலூட்டி பிளவை உண்டாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுவதாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜாவின் மகள் மீது மோசமான அவதூறுகளைக் கூறி அவரைக் கைது செய்யக் கூறுகிறார். டி.ராஜா, தமிழகம் வந்தால் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்கிறார்.

கம்யூனிஸ்டுகளிடையே மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு பேசி வருகிறார். இவரை தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.