பண்ருட்டியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பண்ருட்டி: பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகின்றது. வங்கியின் மூலம் மேல்மாம்பட்டு, தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் உள்ள முதியோர் உதவித்தொகை பெறுவோர் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் பெறுவோர் பயணடைந்து வருகின்றனர்.
இவர்களுக்கு பணபட்டுவாடு செய்வதற்காக விஜயா என்கிற வணிக தொடர்பாளரை பாரத வங்கி நியமித்துள்ளது. இவர், மேற்கொண்ட கிராம பகுதி மக்களுக்கு உதவித்தொகை 100 நாள் திட்டத்தில் ஊதியம் பெற்று தரும் பணியை வழங்கி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊதியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தை பிடித்தம் செய்து கொண்டு பயணாளிகளுக்கு ஊதியம் வழங்கியுள்ளார். இதுகுறித்து பலவமுறை வங்கி மேலாளர் மனோகரிடம் புகார் தெரிவித்தும் விஜயா மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பாக புகார் மனுக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட 200-க்கு மேற்பட்ட கிராம மக்கள் பண்ருட்டி கும்பகோண சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த உதவி காவல் ஆய்வாளர் வள்ளி, மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், ஊராட்சிமன்ற தலைவர் முத்துலட்சுமி, ஊராட்சி செயலர் ஜி.ராகராஜன் உள்ளிட்டோர் வங்கி மேலாளர் மனோகரனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு தற்காலிகமாக 2 மாதத்திற்குள் பணம் பட்டுவாடு செய்யப்படும் என்று கூறியவர் பின்னர் புதிய மாற்று வணிக தொடர்பாளரை நியமனம் செய்வதாக தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக நடந்த மோசடி குறித்து கேட்டதற்கு வங்கிக்கும், வணிக தொடர்பாளருக்கும் இடையே உள்ள தொடர்பு சரியாக உள்ளதாக என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...