அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


நெய்வேலி: கடலூர் அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை வாயிலாக, கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட பத்திரப் பதிவு அலுவலக கட்டிடத்தில் இயங்குகிறது.
இங்கு குரலிசை(வாய்ப்பாடு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய 7 கலைகள் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழுநேரமாக பயிற்றுவிக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.152 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சேர்க்கைக்கான வயது 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2016-17-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்வி ஊக்கத் தொகை ரூ.400, இலவசப் பேருந்து வசதி, விடுதி வசதி, சலுகைக் கட்டணத்தில் புகைவண்டி பயண வசதிகள் ஆகியவைகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
மூன்றாண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குரலிசை, பரதநாட்டிய ஆசிரியர்களாகவும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இசைப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் நாதசுர, தவில் கலைஞராகவும், தேவாரம் ஓதுவார் பணிகள் பெற வாய்ப்புள்ளது.
எனவே இசை ஆர்வமுள்ள மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு அவர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...