ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தெலுங்கு பேசும் மக்கள் சார்பில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியிலும் போட்டியிட முடிவு

தமிழக மக்கள் தொகையில் 42 சதவீத மக்கள் தெலுங்கு பேசுகிறார்கள். இவர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் உரிய அங்கீகாரம் அளிக்காததால் வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2016, 3:15 pm

கோ.ஜெயக்குமார்

தமிழக மக்கள் தொகையில் 42 சதவீத மக்கள் தெலுங்கு பேசுகிறார்கள். இவர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் உரிய அங்கீகாரம் அளிக்காததால் வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாமன்னர் திருமலை நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவனத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் தலைநகரான சென்னையை உருவாக்கியவர் சென்னியப்ப நாயக்கர். தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தைக் கட்டியவர் திருமலை நாயக்கர். பல காலத்தால் அழியாத நினைவுச் சின்னங்களை உருவாக்கி, மதுரை நகரை கலை நகராக, விழா நகராக மாற்றி மக்கள் மகிழும் படி ஆட்சி செய்தவர் திருமலை நாயக்கர்.

இவ்வளவு சீரும் சிறப்பும் செய்த மாமன்னர் திருமலை நாயக்கரை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாத நிலையில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தெலுங்கு இன மக்களுக்கு அங்கீகாரம் அளித்து கௌரவிக்கும் வகையில் திருமலை நாயக்கரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார். அவருக்கு தமிழ மக்கள் தொகையில் 42 சதவீதம் உள்ள தெலுங்கு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரவையின் சார்பில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று செயற்குழு முடிவு செய்துள்ளது. தெலுங்கு இன மக்களை அங்கீகரிக்கும் கட்சியோடு இணைவோம். பேரவை உறுப்பினர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள, அதிக தொகுதிகளை வழங்கும் கட்சியோடு ஒன்று சேருவோம். தமிழகத்தில் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு பெறுவது தெலுங்கு இன மக்கள் கையில் உள்ளது. இதை நிரூபிப்பது இத் தேர்தலில் நமது கடமையாகும்.

இத்திட்டத்தை செயல்படுத்த மதுரையில் பிரமாண்ட மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரேசகர ராவ் ஆகியோரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.