முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

மார்ச் 16 முதல் பெங்களூருவில் பொறியியல் கண்டுபிடிப்பு கண்காட்சி

பெங்களூருவில் மார்ச் 16-ஆம் தேதி முதல் பொறியியல் கண்டுபிடிப்பு கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பெங்களூருவில் மார்ச் 16-ஆம் தேதி முதல் பொறியியல் கண்டுபிடிப்பு கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

இது குறித்து விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் சார்பில் பெங்களூருவில் மார்ச் 16 முதல் 18-ஆம் தேதிவரை பொறியியல் கண்டுபிடிப்பு கண்காட்சி நடத்தப்படவிருக்கிறது.

 இந்த கண்காட்சியில் பொறியியல் மாணவர்களின் புதியகண்டுபிடிப்புகள் இடம்பெறவிருக்கின்றன. மின்சாரம், மின்னணு, இயக்கவியல், தானியங்கி வாகனவியல், கட்டுப்பாட்டு பொறியியல் சார்ந்த அறிவியல் மாதிரிகள், கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்க மாணவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதவிர, திட்டவிவர அறிக்கை தாக்கல், மாணவர் கருத்தரங்குகள், வினாடிவினா நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மார்ச் 5-ஆம் தேதிக்குள் அருங்காட்சியகத்தின் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். முன்பதிவு இலவசம். மேலும் விவரங்களுக்கு www.vismuseum.gov.in என்ற இணையதளம் அல்லது மின்னஞ்சல்:-vitmuseum000gmail.com அல்லது தொலைபேசி எண்கள்-080-22866200, 22040224, 22040268 ஆகியவற்றை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.