ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் செப்புத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, புதன்கிழமை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இம் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :23 மார்ச் 2016, 5:07 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, புதன்கிழமை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இம் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8-ம் திருநாளான செவ்வாய்கிழமை இரவு சுவாமிகள் வீதி எழுந்தருளி சாலியன்தோப்பு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் ஸ்ரீஆண்டாள் புஷ்ப பல்லாக்கிலும், ஸ்ரீரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் கன்னியா லக்கினத்தில் தங்க தோளுக்கினியானில் திருத்தேர் கடாக்ஷித்தல் நடைபெற்றது.

புதன்கிழமை காலை ஸ்ரீரெங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் செப்புத் திருத்தேர் கோரதம் எழுந்தருளல் நடைபெற்று, தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.