ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கலசலிங்கம் பல்கலை.யில் விளையாட்டு வீரர்கள் தேர்வு போட்டி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறை இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி உதவித் தொகையுடன் படிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தவதற்கான போட்டிகள் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :30 மார்ச் 2016, 5:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறை இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி உதவித் தொகையுடன் படிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தவதற்கான போட்டிகள் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறை இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியில், கலை மற்றும் அறிவியல் (இளங்கலை மற்றும் முதுகலை) பாடப் பிரிவிற்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்காக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி (புதன்கிழமை) முதல் 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணி முதல் தேர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, கபடி, கோ-கோ, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் ஹேண்ட் பால் ஆகிய விளையாட்டுகளுக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பள்ளிக் கல்வித் துறையினரால் நடத்தப்படும் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்படும்

தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் சார்பில் பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.போட்டியில் 2015-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ மாணவியர் மற்றும் 2015-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம்.போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவியர் தங்களது விளையாட்டுச் சான்றிதழ்களை தவறாது கொண்டு வர வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்  அந்தந்தத் துறையில் படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 97882-25996 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.