ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.சந்திரபிரபாவிற்கு பொதுமக்கள் மற்றும் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 மே 2016, 9:02 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.சந்திரபிரபாவிற்கு பொதுமக்கள் மற்றும் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தொகுதிக்கு வந்த அவருக்கு, நகர் எல்கையான அழகாபுரியில் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் சார்பில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து வத்திராயிருப்புக்குச் சென்ற சந்திரபிரபாவிற்கு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவி கனகுஅம்மாள் தலைமையில் ஒன்றியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வழிவிடு முருகன் கோவிலில் வழிபாடு செய்த அவர், கிருஷ்ணன்கோவில் வழியே ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் வந்து, அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் பேரணியாக பேருந்து நிலையம் சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நகரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரபிரபா கூறியதாவது:

தமிழக முதல்வர் செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களும் தொகுதியின் கடைக்கோடி ஏழை மக்கள் வரை சென்றடையும் வகையில் தீவிரமாக பணிபுரிவேன். பொதுமக்கள் எப்போதும், பொதுப் பிரச்னைகளுக்கு என்னை மிகவும் சுலபமாக அணுகலாம். சட்டத்திற்குட்பட்டு தொகுதி மக்கள் அனைவருக்கும் எல்லா உதவிகளும் செய்யப்படும் என்றார்.

அப்போது உடன் மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், நகர்மன்ற துணைத்தலைவி சரோஜா நடராஜன், தொழிற்சங்கத் தலைவர் போஸ்பிரபு, நகர்மன்ற உறுப்பினர்கள் மீராதனலட்சுமி முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.