திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

திருமலையில்  நவம்பர் 4ம் தேதி டயல் யுவர் ஈஓ நிகழ்ச்சி நடைபெறும்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் நவம்பர் 4ம் தேதி டயல் யுவர் ஈஓ நிகழ்ச்சி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On :2 நவம்பர் 2016, 10:37 am

திருப்பதி

திருமலையில் நவம்பர் 4ம் தேதி டயல் யுவர் ஈஓ நிகழ்ச்சி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை டயல் யுவர் ஈஓ என்ற பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றதால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யபட்டது. 

அதனால் திருமலையில் இம்மாதம் 4ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனால் இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் குற்றம் குறைகள், ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவிடம் தெரிவிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0877-2263261 என்ற தேவஸ்தான தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.