சென்னை,
மர்மக் காய்ச்சலுக்கு சிறுவர், சிறுமியர் தொடர்ந்து பலியாவதைத் தடுக்கும் வகையில் வேகமான, வெளிப்படையான சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சல்களுக்கு சிறுவர், சிறுமியர் பலியாவது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, டெங்கு காய்ச்சலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் பகுதியைச் சேர்ந்த ஆஃபியா ஜாஸ்மின் என்ற 11 வயது சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவும் போது அது குறித்த முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டிய தமிழக சுகாதாரத்துறை, என்ன காய்ச்சல் என்பதைச் சொல்லாமல், மர்மக் காய்ச்சல் என்று அறிவிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
மர்மக் காய்ச்சலுக்கு என்னவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதும் மர்மமான முறையிலேயே இருப்பதால் குழந்தைகள் பலியாவது தொடர்கிறது.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பலியான நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை என்ற இடத்தில் வாந்தி மயக்கத்திற்குள்ளான 5 சிறுவர்களில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
எனவே, சிறுவர், சிறுமியர் தொடர்ந்து பலியாவதைத் தடுக்கும் வகையில் வேகமான, வெளிப்படையான சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


