குழந்தைக்காக அரசியல், திரைப்படத் துறையில் இருந்து விலகினேன்: நடிகர் நெப்போலியன் பேட்டி
தேர்தல் விதிமீறல் வழக்கில் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி நெப்போலியன் இன்று ஆஜரானார்.


நெய்வேலி: தேர்தல் விதிமீறல் வழக்கில் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி நெப்போலியன் இன்று ஆஜரானார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தேர்தலில் பண்ருட்டி சார்பில் போட்டியிட்ட சபா ராஜேந்திரனை ஆதாரரித்து பாமக கூட்டணி கட்சித் தலைவரான ராமதாஸ் தொல் திருமாளவன், சுபவீர பாண்டியன், முன்னாள் எம்.பி மற்றும் நடிகர் நெப்போலியன். ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர்தலின் போது வேனில் 50 மீட்டர் தொலைவில் இருந்து பேசியதாக நெப்போலியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜராகிக் குற்ற நகலை பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் வருகை தந்தார் நெப்போலியன்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 2011-ல் 50 மீட்டர் தொலைவில் இருந்து பேசியதாக என் மீது தேவையற்ற ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். என் குழந்தைக்கு தற்போது உடல்நலக் குறைவால் நான் அமெரிக்காவில் இருக்கிறேன். குழந்தையை அருகில் இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அடிக்கடி என்னால் நீதிமன்றத்திற்கு வர இயலாது. குழந்தைக்காகத் தான் அரசியல் மற்றும் திரைப்பட துறையில் இருந்து விலகி இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...