மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் இங்குள்ள மக்கள் கடும் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரம் தெற்கே உள்ள டலாகா என்ற இடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டின் தலைநகரான மெட்ரோ மணிலா, லகுனா, ரிஸால், கவிட்டே, ஸம்பேல்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்றிரவு இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுமார் நாற்பது முறை அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


