ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

ஜாதவுக்கு பாகிஸ்தான்  தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 10:10 am

DIN

சென்னை: ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியருக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.இதையடுத்து 

இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியா, பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’, என்றார்.

குல்பூஷன் ஜாதவ் மீதுள்ள ’ரா பிரிவு உளவாளி’ என்ற குற்றச் சாட்டை, இந்தியா முதலில் இருந்தே மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.