விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜெயலலிதா சிகிச்சை விடியோ விவகாரம்: வெற்றிவேலுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிட்டது தொடர்பாக, முன்ஜாமீன் கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனு

News image
Updated On :28 டிசம்பர் 2017, 4:02 am

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிட்டது தொடர்பாக, முன்ஜாமீன் கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை (டிச.28) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கடந்த 20-ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விடியோ காட்சியை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதே போல் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிவேல் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு வியாழக்கிழமை (டிச.28) விசாரணைக்கு வருகிறது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.