சோமனூரில் செல்போன் கடையில் திருட்டு: குற்றவாளி கைது - 6 செல்போன்கள் பறிமுதல்
கோவை மாவட்டம் சோமனூரில் ஒரு செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் கூரையைப் பிரித்து


கோவை மாவட்டம் சோமனூரில் ஒரு செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி 6க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டது.
அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சிடிவி கேமராவில் டிவிஆர் பதிவையும் அந்த நபர் எடுத்துச் சென்று விட்டார். இந்நிலையில் அந்த டி..விஆர். சோமனூர் அருகே குப்பைமேட்டில் கிடப்பதாக தர்மத்தம் பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்த டி.வி.ஆரை எடுத்து பார்த்தபோது, குற்றவாளியை அடையாளம் கண்டனர். இதையடுத்து சேலம் வாழப்பாடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் சேகர் 27 என்பவரை போலீஸார் கோவை ஈச்சன்காடு அருகே கைது செய்தனர். அவரிடம் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 2 செல்போன்கள் அருகே உள்ள இறைச்சி கடையில் வைத்ததாக அவர் கூறியதையடுத்து இறைச்சிக் கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...