புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் ஒருவரை இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2017, 3:28 am

சரவண பெருமாள்

சென்னை : 

திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் ஒருவரை இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர். முகமூடி அணிந்த 3 நபர்கள் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலையில் நகர அதிமுக செயலாளராக இருந்தவர் கனகராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அதே பதவியில் நீடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை அவர் நடைப்பயிற்சியில் இருந்த போது திருவண்ணாமலை கோவில் திருமஞ்சன கோபுரம் எதிரில் வந்த போது மூன்று பேர் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

அவருடன் வந்தவருக்கும் வெட்டுகாயம் பட்டுள்ளது. உடன் வந்தவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் திருவண்ணாமலை நகர்புற காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.  சொத்து பிரச்னை காரணமாக இந்த படுகொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை எர்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.