எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடிநீர் தட்டுபாடு எதிரொலி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 300 கனஅடி தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் எழுந்துள்ள குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில்

News image
Updated On :15 ஜனவரி 2017, 12:51 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் எழுந்துள்ள குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவத்தில் இயல்பான அளவைவிட 62 சதவீதம் மழை குறைவாக பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்தவாறு உயரவில்லை. 

அணைகளின் நீர்இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுவதால் அணைகளில் இருந்து 100 கனஅடி மட்டும் திறந்து விடப்படுவதால் இம்மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

தாமிரவருணி ஆற்றில் அமைந்துள்ள குடிநீர் திட்டங்களில் இருந்து ஓரளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில் திருநெல்வேலி மாநகரில் தட்டுபாடு எழுந்துள்ளது.

கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பரவலாக குடிநீர் விநியோகம் பாதி்க்கப்பட்டு்ள்ளது. கடையம், பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ஒன்றியங்களில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு்ள்ளது.

இதனிடையே இம்மாவட்டத்தில் எழுந்துள்ள குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 95.60 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

பாபநாசம் அணையின் நீர்ம்ட்டம் 25.40 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 61.19 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 36.14 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 48.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம 37.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 46.23 அடி, 

குண்டாறு அணையின் நீர்மட்டம் 22.12 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 67 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.41 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 10 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.