சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த ராமநாதபுரம் இளைஞர் கைது

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து போலி முத்திரை பதித்து மலேசியாவிலிருந்து வந்த ராமநாதபுரம்

Updated On :23 ஜனவரி 2017, 5:01 am

திருச்சி: பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து போலி முத்திரை பதித்து மலேசியாவிலிருந்து வந்த ராமநாதபுரம் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் அலக்காங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (35). அவர் மலேசியாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது விசா காலம் முடிவடைந்து அங்கே தங்கியிருந்ததால் அவருக்கு மீண்டும் இந்தியா வர டிக்கெட் பெறுவதில் சிரமம் இருந்தது.

இதனையடுத்து முகவர் ஒருவரின் உதவியுடன் அண்மையில் மலேசியா சென்றதுபோல போலி முத்திரை பதித்து, அதன் பின்னர் டிக்கெட் பெற்று தாயகம் திரும்பினார். ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி வந்த அவரது ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்த போது, முறைகேடு தெரியவந்தது. இதனையடுத்து அவரை விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.