மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 125 பள்ளிகளைச் சேர்ந்த 9748 மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 125 பள்ளிகளில் படிக்கும் 9748 மாணவ மாணவியருக்கு

Updated On :7 ஜூன் 2017, 8:47 pm IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 125 பள்ளிகளில் படிக்கும் 9748 மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா பொருட்கள் பள்ளி தொடங்கும் நாளே வழங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா புத்தகம், நோட்டு, கிரையான், வண்ண பென்சில், சீருடை முதலியவற்றை வழங்கி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் பேசுகையில் கூறியதாவது:

அரசு உத்தரவுப் படி ஏப்ரல் மாத இறுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் 12 வழித்தடங்கள் வழியே அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

தற்போது பள்ளி தொடங்கும் நாளே அவை மாணவ மாணவியருக்கு வழங்கும் பணி சரகத்தில் உள்ள 125 பள்ளிகளிலும் நடைபெற்றுள்ளது. இதனால் 9748 மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.