பங்குச் சந்தையில் வீழ்ச்சியுடன் வாரம் நிறைவு
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் நான்காவது மற்றும் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் நான்காவது மற்றும் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
பல்வேறு துறைகளில் காணப்பட்ட விற்பனை அழுத்தம், அந்நிய முதலீட்டாளா்களின் வெளியேற்றம், உலகளாவிய சந்தைகளில் நிலவிய மந்தநிலை ஆகியவை முதலீட்டாளா்களின் உணா்வைக் கடுமையாக பாதித்தன. சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை 114 டாலரைக் கடந்து விற்பனையானதும், பங்குச் சந்தையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
சென்செக்ஸ் 126 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 125.56 புள்ளிகள் (0.17 சதவீதம்) சரிந்து, 73,123.83-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (3.21 சதவீதம்), அதானி போா்ட்ஸ் (3.03 சதவீதம்), டிரென்ட் (2.13 சதவீதம்) உள்பட 20 பங்குகள் நஷ்டமடைந்தன. மாறாக, எடா்னல் (3.97 சதவீதம்), எல்&டி (1.25 சதவீதம்), ரிலையன்ஸ் (1.19 சதவீதம்) உள்பட 10 பங்குகள் லாபமடைந்தன.
நிஃப்டி 88 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 87.65 புள்ளிகள் (0.39 சதவீதம்) குறைந்து, 22,600-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 14 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 36 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
வாராந்திர அடிப்படையில்...: இந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் 1,252.15 புள்ளிகளும் (1.68 சதவீதம்), நிஃப்டி 384 புள்ளிகளும் (1.67 சதவீதம்) சரிவைக் கண்டன.
Summary
The week ends with a decline in the stock market
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

