ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்திய அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்: 50 பேர் கைது

தமிழர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக கூறி மத்திய  அமைச்சர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை

News image
Updated On :8 மார்ச் 2017, 12:12 pm

சுஜித்குமார்

தமிழர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாக கூறி மத்திய  அமைச்சர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக புதுச்சேரியில் கருப்புகொடி போராட்டம் மற்றும் பிரதமரின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஹைட்ரோ- கார்பன் திட்டம் மூலம் தமிழகம் - புதுச்சேரியை பாலைவனமாக்குவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது,  தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பதாகவும்,  தமிழர் விரோத போக்கை மத்திய பாஜக அரசு கடைபிடிப்பதாகவும் கண்டித்து மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீத்தாராமன் வருகையை எதிர்த்தும் புதுச்சேரி அண்ணா சிலை அருகே தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக கருப்புகொடி போராட்டம் நடைபெற்றது.

மேலும் போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.