மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்படுகிறது: முதல்வர் நாராயணசாமி

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 மார்ச் 2017, 12:46 pm

தினமணி

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் 3-வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் இன்று நடைபெற்றது.
இயக்குநர் டாக்டர் தமிழரசி தமிழ்மணி வரவேற்றார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் கருப்புசாமி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எப்.ஷாஜஹான், அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வள்ளி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
விழாவுக்கு தலைமை தாங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
பட்டங்களை பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தான் வெற்றியை காண முடியும். பல தோல்விகளை கண்டால் தான் வெற்றி பெற வேண்டும் என உத்வேகம் கிடைக்கும்
புதுவையில் வாழ் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய பல்கலை, ஜிப்மர், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி என புதுவை மாநிலம் கல்விக்கேந்திரமாக திகழ்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்துக்கு அடுத்து புதுவை முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது. புதுச்சேரியில் இந்திய மேலாண்மைக் கல்வி (ஐஐஎம்) நிறுவனத்தை கொண்டு வர மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இதுகுறித்து நீதி ஆயோக் அமைப்பில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்பப் பல்கலையாக மாற்ற மத்திய அரசு ரூ.60 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஆயுத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி சட்டக்கல்லூரி நிலை சரியாக இல்லை. அதை மேம்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்தும். வரும் கல்வியாண்டில் சட்டக்கல்லூரிக்கு கூடுதல் நிதி தரப்படும். வேளாண் கல்லூரியை பல்கலையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். புதுவை பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக விளங்குகிறது.
பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
எழுத்துக் கல்வியோடு மட்டுமின்றி ஆராய்ச்சிக் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது நாட்டில் ஆராய்ச்சிக்கு வெறும் 1.2 சதவீதம் நிதியே ஒதுக்கப்படுகிறது.
அரசியல் சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளது. ஆனால் தற்போது நமது நாட்டில் துரதிஷ்டவசமாக பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை மறுக்கப்படுகிறது.
இது வேதனை தருகிகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.