ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அரசையும், ஆளுநரையும் கண்டித்து என்.ஆர். காங் - அதிமுக வெளிநடப்பு

காங்கிரஸ் அரசைக் கண்டித்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், துணைநிலை ஆளுநரை கண்டித்து

News image
Updated On :30 மார்ச் 2017, 12:57 pm

தினமணி

புதுச்சேரி: காங்கிரஸ் அரசைக் கண்டித்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், துணைநிலை ஆளுநரை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வியாழக்கிழமை பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேறப்பட்டதும் பேரவைத் தலைவர் சட்ட முன்வரைவுகளை வாசிக்க முதல்வரை அழைத்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:

காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நீட் தகுதித் தேர்வு தொடர்பாக முறையான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் பணி ஆணை பெற்றவர்களை நீக்கம் செய்தது தான் சாதனை. தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.

துணைநிலை ஆளுநருடன் மோதல் போக்கை காங்கிரஸ் அரசு கடைபிடித்து வருவதால் மாநில வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தராததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
அதிமுகவினர் வெளிநடப்பு

பேரவை தலைவர் இருக்கையை முற்றுகையிட அதிமுக எம்.எல்.ஏக்கள் முயன்றதால் அவைக் காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். அவைக்காவலர்களுடன் அதிமுக உறுப்பினர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுப்ட்டனர். 
முதல்வர் நாராயணசாமி: இருக்கையில் அமர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.  கொறடா: உரிமை மீறல் பிரச்னையை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரிமை தொடர்பான பிரச்னை. இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

லட்சுமி நாராயணன்: அதிமுக உறுப்பினர்கள் பிரச்னை எடுத்துக் கொள்ளப்படும்.
அன்பழகன்: துணைநிலை ஆளுநரால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர் மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நடத்துகிறார். நாங்கள் ஒத்தி வைப்பு தீர்மானம் தந்துள்ளோம். அதைக் எடுக்காத பேரவையைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.