வராக்கடன்களை வசூலிக்கும் அவசரச் சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
வராக்கடன்களை வசூலிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.


புதுதில்லி: வராக்கடன்களை வசூலிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில், வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.
நாட்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வராக்கடன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அவசரச் சட்டத்தின் மூலம் வங்கிகளின் கிடிக்கிப்பிடியின் மூலம் விரைந்து வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...