புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில்துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) புதுவை பிரிவு தலைவர் ஆர்.டி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில் தொழில் துறை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் ஒற்றை சாளர முறை, துரிதமான ஓப்புதல், சுயசான்றளிப்பு மூலம் ஓப்புதல் பெறுதல், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு உரிமம் வழங்குதல், மூலம் புதுவையை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.
அன்னிய நேரடி முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்படுத்துதல், மருந்து உற்பத்தி பூங்கா, ஆயுத்த ஆடை, உணவு பதப்படுத்துதல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு பிரிவு போன்றவை தொடங்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.
மேலும் பொருளாதார வளர்ச்சிக்காக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சுமூகமாக செயல்படுத்த அரசின் முடிவு பாராட்டுக்குரியது. இந்திய தொழில் கூட்டமைப்பு முதல்வர் நாராயணசாமி அரசுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் என்றார் ஸ்ரீகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

