வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தென்மேற்று வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையத்தால் சென்னையில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டது, ஆனால் பெரிய மழை பெய்யவில்லை, தாழ்வு மையமான இன்றும்(நவ.12) தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. 

ஏறத்தாழ 2 ஆயிரம் சதுர கி.மீ., அளவில் கடல் பகுதியில் பரவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தினால் மேகக்கூட்டங்கள் நிலப்பகுதி நோக்கி வரும் போது அனைத்தும் கரையை நெருங்கும் தருணத்தில் காற்றின் காரணமாக திசைமாறித் திரும்பி விட்டது. இதன் காரணமாக கடலிலேயே கனமழை பெய்துள்ளது. இதனால் நில பகுதிகளில் சிறிதளவு மழை மட்டுமே பெய்தது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரி்வித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. சென்னையில் டிஜிபி அலுவலகம், கன்னியாகுமரியில் தலா 5 மி.மீட்டர் மழையும் மகாபலிபுரம், குளச்சல், திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் 4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com