புதுச்சேரி பல்கலைக்கழக மாணவரை தாக்கி  வழிப்பறி செய்ய முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவரை தாக்கி வழிப்பறி செய்ய முயற்சித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

புதுச்சேரி:  புதுச்சேரி பல்கலைக்கழக மாணவரை தாக்கி வழிப்பறி செய்ய முயற்சித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அனங்க உதய போகி. இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமஸ்கிருதம் முதலாமாண்டு படித்து வருகிறார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் இவர் கடந்த 14ம் தேதி வெளியே சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தார்.  

அப்போது அவரை அடையாளம் தெரியாத 4 பேர் வழிமறித்து மிரட்டினர். பின்னர் அவரை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் அவரை ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. கையில் பணம் இல்லை என்றதும் செல்போனை பிடுங்கி கொண்டனர். பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கிகொள்ள கூறியுள்ளனர்.

அதற்கு மாணவர், விடுதி அறையில் பணம் இருக்கிறது. அங்கு வாருங்கள் என அழைத்து சென்றுள்ளார். அப்போது விடுதி அருகில் சென்றதும் மர்ம நபர்கள் மாணவரிடம் செல்போனை கொடுத்துவிட்டு அங்கு காத்திருந்தனர். மாணவர் விடுதிக்குள் சென்றதும் கூச்சல் போட்டு மற்ற மாணவர்களை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இது குறித்து மாணவர் அனங்க உதய போகி காலாப்பட்டு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸார் வழக்குப்  பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com