பாபநாசம் அணையில் அதிகபட்சம் 157 மி.மீ மழை: அணைகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!


திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையில் அதிகபட்சமாக 157 மி.மீ மழை பதிவாகின.
வடகிழக்குப்பருவ மழை தொடங்கியதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்):
அதிகபட்சமாக பாபநாசம் அணை -157, பாபநாசம் கீழ் அணை- 10, சேர்வலாறு அணை-55, கருப்பாநதி அணை-4, குண்டாறு அணை-2, அடவிநயினார் அணை-13, நம்பியாறு அணை-20, கொடுமுடியாறு அணை-10.
இம்மாவட்டத்தில் பிற பகுதியில்... திருநெல்வேலி-1, பாளையங்கோட்டை-8, நான்குனேரி-17, ராதாபுரம்-7, சேரன்மகாதேவி-4, கன்னடியன் அணைக்கட்டு-2, அம்பாசமுத்திரம்-4.8, ஆலங்குளம்-1.4, தென்காசி-2, செங்கோட்டை-2, ஆய்க்குடி-10.4, சிவகிரி-8.23, சங்கரன்கோவில்=7.
நீர்வரத்து அதிகரிப்பு: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1526.54 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 254 கனஅடி, கடனாநதி அணைக்கு 60 கனஅடி, ராமநதி அணைக்கு 20 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 32 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.80 அடி உயர்ந்து 72.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் மேலும் ஓரடி உயர்ந்து 84.79 அடியாகவும்,மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 52.80 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 61.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 58.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 56.70 அடி,
குண்டாறு அணையின் நீர்மட்டம் 35.88 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 99.00 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 6.62 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50.75 அடியாகவும் இருந்தது.
அருவிகளில் நீர்வரத்து: மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாணதீர்த்த அருவிகளில் வழக்கத்தை விட கூடுதலாக நீர்வரத்து இருந்தது.
தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி பணிகளை தீவிரமடைந்துள்ளன. நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...