ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்பட்டு வருகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சில்லத்தூர் கிராமத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை அன்னப்பன்பேட்டையில் தனது 3-ஆம் நாள் பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் நடைப்பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட்
மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இரும்புதலை, திருக்கருக்காவூர், சாலியமங்கலம் உள்பட 10 கிராமங்கள் வழியாக, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், வழிநெடுகிலும், விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.
பிற்பகலில் அம்மாப்பேட்டை அருகே புத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின், ஜாடிக்கேற்ற மூடி போல செயல்பட்டு வரும் மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மெலட்டூர், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அம்மாபேட்டை, அமராவதி, வெட்டாற்றுபாலம் வழியாக நீடாமங்கலத்தை சென்றடைகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


