மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி ராஜ்காட்டில் ராகுல் காந்தி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 10:34 am

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

தில்லி ராஜ்காட்டில் நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்றுள்ளார். உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி, தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி முழுவதும் எம்.பி.க்களின் தொடர் அமளியால் வீணானது. இதனைக் கண்டித்து, பாஜக சார்பில் வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பிரதமர் அறிவித்தார்.

இதனிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸார் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.