தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசுத் திட்டங்கள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது, பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது என பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனிடையே, பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் கன்னத்தில் தட்டிய விவகாரம் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆளுநர் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனம் வலுத்து வரும் நிலையில், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தில்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



