தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆப்கானிஸ்தானில் இந்தியா-சீனாவின் கூட்டு பொருளாதார திட்டம்: பீதியடைந்துள்ளது பாகிஸ்தான்! 

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை சீனா சென்றார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

News image
Updated On :28 ஏப்ரல் 2018, 8:31 am

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை சீனா சென்றார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

அப்போது, இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இரண்டாவாது நாளான இன்று வூஹான் மாகாணத்தில் உள்ள பிரபலமான கிழக்கு ஏரியில் நீண்ட படகு சவாரி மற்றும் நடைபயணத்துடன் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த இந்த பேச்சுவார்த்தை, இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக நீடித்தது.

இந்தியா-சீனாவின் கூட்டு பொருளாதார திட்டம் ஒன்றை ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள  வூஹன் நகரில்  சீன அதிபர் ஷி-ஜின்பிங் ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த கூட்டு நடவடிக்கை பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுடன் இணைந்து பொருளாதாரப் பணிகளை மேற்கொள்ள சீன முயற்சித்தது. ஆனால், இதற்கு ஆப்கானிஸ்தான், அமெரிக்காவிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பாகிஸ்தானின் தலையீட்டை தலிபான் தீவிரவாதிகளும் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பொருளாதாரப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.

பின்னர் அவருக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட மதிய உணவுக்காக சிறப்பு மெனு அட்டை வடிவமைக்கப்பட்டது. தேசிய பறவையின் மயில் படத்துடன், இந்த அட்டையில் இந்திய கொடிகளின் நிறங்கள் இருந்தன. மதிய உணவுக்குப் பிறகு பிரதமர் மோடி தில்லி புறப்பட்டார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.