அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் அரசியல் இருக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் அரசியல் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் அரசியல் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வசந்தகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், உயர்நதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அரசு தரப்பில் ஆஜராக வழக்குரைஞர்களை நியமித்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசு வழக்குரைஞர் நியமனம் தொடர்பான விதிகளை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. பிரிஜேஸ்வரர் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், புதிய விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரயிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தகுதி வாய்ந்த நபர்களை அரசு வழக்குரைஞர் பதவிகளில் நியமிக்க வேண்டும். அந்த நியமனம் ஒருதலைபட்சமாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிóல் கூறியுள்ளது. தமிழக அரசு உருவாக்கியுள்ள விதிகளின்படி, விண்ணப்பிக்கும் வழக்குரைஞர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து தேர்வுக்குழுவுக்கு அரசு தலைமை வழக்குரைஞர் பரிந்துரை செய்வார். அந்த தேர்வுக் குழுவில், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் மற்றும் அரசு தலைமை வழக்குரைஞர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவே அரசு வழக்குரைஞர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழக்குரைஞர் பதவிக்கு தகுதிவாய்ந்த திறமையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நீதிமன்றத்தில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடியும். நீதிமன்றங்களில் சிறந்த தீர்ப்புகள் வெளிவர அந்த வழக்கில் ஆஜராகும் திறமையான வழக்குரைஞர்களின் உதவியும் அவசியமாகும்.
எனவே அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் அந்த பதவியை தங்களுக்குத் தான் தர வேண்டும் என யாரும் உரிமை கோர முடியாது. அதே வேளையில் தகுதியான வழக்குரைஞர்களை அந்தப் பதவிகளுக்கு பரிசீலிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் அரசு வழக்குரைஞர் பதவிகளுக்கு திறமையானவர்களை நியமிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். மேலும் அரசு வழக்குரைஞர் பதவிக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பை அனைத்து வழக்குரைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான அறிவிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர் சங்கங்களில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...