ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார் நிதின்கட்கரி

ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 9:52 am IST


சென்னை: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார்.

ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு 29-ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

எனினும், கருணாநிதியின் ரத்தத்தில் கலந்துள்ள கடும் நோய்த்தொற்று பாதிப்பை ("சீரியஸ் செப்ஸிஸ்') அகற்றுவதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிரை வழியே தொடர்ந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் அவருக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவெகௌடா உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களும், ஆந்திரம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், திரைப்படத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய ஹைதராபாத்திலிருந்து தனிவிமானம் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை நேரில் பார்த்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, மருத்துவர்களிடம் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.