லோம்போக்: இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 -ஆக அதிகரித்துள்ளது.
லாம்போக்கின் வடக்குப் பகுதியில் லொகோயன் அருகே பூமிக்கடியில் 31 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
லோம்போக் தீவின் முக்கிய நகரான மேட்டரமில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து, அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு தங்கள் வீடுகளிலிருந்து ஓட்டமெடுத்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிதமாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 24 முறை நில அதிர்வுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் லோம்போக்கில் நிகழ்ந்த இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே, நிலநடுக்கத்தையடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாலி தீவிலும் உணரப்பட்டது.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி இதே லோம்போக் தீவில் 6.4 அலகுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர். மேலும், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.
வடக்கு லோம்போக்கில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் உயிரிழந்தனர் என்று மேற்கு நுஸா டெங்காரா பேரிடர் மேலாண்மை நிறுவன தலைவர் ஹாஜி ரம் தெரிவித்தார்.
இந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


