புதுதில்லி: நடப்பாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 70.1 ஆக இருந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து இருந்தது. பின்னர் வர்த்தக நேர முடிவில் 69.89 ஆக இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய மதிப்பை விட 43 காசுகள் குறைந்து தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு 70.32 ஆக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும். அந்நியச்செலாவணி சந்தையில் சில கட்டுப்பாடுகளை விதித்து டாலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினிய பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியதால் துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செவ்வாய்கிழமை ரூ.378.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி!

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


