பிவாண்டி: மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பாஜக தலைவர் குருநாத் வாமன்(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தானே மாவட்ட பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி, பிவாண்டியில் செராவாலி கிராமம் அருகே நேற்று திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் காரில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குருநாத் வாமனின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், குருநாத் வாமன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் தலைமறைவானார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், குருநாத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான பேருந்தின் ஓட்டுநர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 304(ஏ), 184 மற்றும் 279 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


