அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமல் மீறினால் அபராதம்: தமிழக அரசு

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

News image
Updated On :31 டிசம்பர் 2018, 9:33 am IST

சென்னை: 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இதைதொடர்ந்து நாளை முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், கடைகள், உணவகங்கள், விற்பனையாளர், காய்கறிச்சந்தை உள்ளிட்ட பிற இடங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ய வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளில் இருந்து மூவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.