மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா..? பரவும் வதந்தி.. பயத்தில் மக்கள்!
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கிரகணம் நடந்தது


உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கிரகணம் நடந்தது முதலே எதுவும் சரியில்லை என்றும் குழந்தைகளுக்கு ஆபத்து என்று பரவி வரும் வதந்தியால் மக்கள் பயத்தில் உள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகள் தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம், விபத்தா அல்லது சதியா என பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் எச்.ராஜா நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிரகணம் நடந்தது முதலே எதுவும் சரியில்லை என்றும் தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால், குழந்தைகளுக்கு ஆபத்து என்று வதந்தி பரவுகிறது.
இத்ததைகய பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குவேண்டுமானால், பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் 9 ஆண்களிடம் தலா ரூ.1 வீதம் 9 பேரிடம் ரூ.9 தர்மம் வாங்கி, அந்த ரூபாயில் வளையல் வாங்கி அம்மன் கோவிலுக்கு சென்று வளையல் போட வேண்டும் என்றும் ஆண் குழந்தைகள் வைத்திருப்பவர் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்ப வீட்டு வாசலில் வெற்றிலை அல்லது வாழை இலையில் பச்சை அரிசி வைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று யாரோ வதந்தியை கிளப்பிவிட அது தீயாக பரவி வருகிறது.
இந்த வதந்தியை நம்பி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டு வாசலில் விளக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...