ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள 84 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட இந்திய ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் அத்துமீறல் தொடரும் நிலையில், அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ராஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சுமார் 84 பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 3 தினங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள், சுந்தர்பானி முதல் மஞ்சகோட்டே வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஜோரி துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


