தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் விதிமுறையை கண்டித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:11 am

DIN

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் விதிமுறையை கண்டித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள எண்ணெய் நிறுவன சேமிப்பு கிடங்குகளிலிந்து சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் கோராமல் பழைய ஒப்பந்தத்தைடே எண்ணெய் நிறுவனங்கள் 6 மாத காலம் நீட்டித்தன.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில், வாடகை ஒப்பந்தப்புள்ளி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவில் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் அதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய ஒப்பந்த விதிமுறைகள் படி மாநிலயளவில் டெண்டர் நடத்தப்பட்டால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால், இதனை மறுபரிசீலனை செய்யது, பழைய முறைப்படி டெண்டர் நடத்த வேண்டும் என வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 4,500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில், சமையல் எரிவாயு ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனைல் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.