ஹைதராபாத்தில் கொடூரம்: 3 வயது குழந்தையை தந்தையே ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூரம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தையே 3 வயது மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூர சம்பவம் சமூக
ஹைதராபாத்தில் கொடூரம்: 3 வயது குழந்தையை தந்தையே ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூரம்!
Updated on
1 min read


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தையே 3 வயது மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஸ்ரீனிவாச காலனியில் வசித்து வந்தவர் சிவா கவுடா, தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். குடி போதைக்கு அடிமையான சிவா கவுடா தனது மனைவி காவியாவிடம் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிவா கவுடா, மனைவி காவியாவிடம்  சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போக கோபத்தில் வீட்டிற்குள் இருந்த குழந்தையை வெளியே இழுத்து வந்து தூக்கி வீசி உள்ளார். பின்னர் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது தலைகீழாக  தூக்கி அடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்து அசைவற்று கிடந்த குழந்தை பார்த்து அதிர்ச்சி தாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையை தூக்கி கொண்டு தாயிடம் கொடுக்கவும் மறுத்துள்ளார். 

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீஸார் குழந்தையை மீட்டு நீலோபர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாகவும், சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் நலன் காப்பாகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய கணவர் சிவா கவுடா மீது குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. ஆனால், போலீஸார் தாமாக முன்வந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 324 பிரிவின் கீழ், குழந்தைகள் வன்கொடுமை சட்டம் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற குழந்தையின் கொடூர தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com