அலகாபாத்: உத்தரபிரதேசத்தில் அப்போதைய முதல்வர் மாயாவதி ஆட்சி காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு விபத்தில் தான் உயிர் பிழைத்த தினத்தை ‘மறுபிறப்பு’ எடுத்த தினமாக கொண்டாடி வருகிறார் உத்தரபிரதேச அமைச்சர் நந்த் கோபால் குப்தா.
பொதுவாக தங்கள் பிறந்த தினத்தை கோலகலாமாக கொண்டாடி வரும் மக்களுக்கு மத்தியில், உத்தரபிரதேச மாநிலம் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தான் காப்பற்றப்பட்ட தினத்தை ‘மறுபிறப்பு’ தினமாக பூஜை செய்து கொண்டாடி வருகிறார்.
முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கிக்கொண்டு பாதுகாப்பாக உயிர்பிழைத்த தினத்தை, தற்போதைய பாஜக அமைச்சர் நந்த் கோபால் குப்தா "மறுபிறப்பு" எடுத்த தினமாக பூஜை செய்து கொண்டாடினார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரத்தில் நேற்று வியாழக்கிழை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அலகாபாத் நகரத்தில் கொண்டாடப்பட்டு வரும் நந்த் கோபால் மறுபிறப்பு தின நிகழ்ச்சியின் போது எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக பஹதூர்கான்ஜ் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


